| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 445 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3 | வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3 | எயிற்றிடை,Eyittridai - (வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.) (தனது) கோரப் பல் மேல் மண்,Man - பூமியை கொண்ட,Kondra - தாங்கி யருள எந்தை,Endhai - எம்பெருமான் (அடியேனுக்கு) வயிற்றில் தொழுவை,Vayitril Thozhuvai - வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை பிரித்து,Piriththu - கழித்தருளியும் புலம்,Pulam - இந்திரியங்களால் வல் சேவை,Val Saevai - கடுயைமான ரிஷபங்களை அதக்கி,Athakki - (பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும் கயிறும்,Kayirum - நரம்புகளும் அக்கு,Akku - எலும்புகளுமேயா யிருக்கின்ற ஆணி,Aani - சரீரத்தில் (ஆசையை) கழித்து,Kaliththu - ஒழித்தருளியும் பாசம்,Paasam - (யம தூதர்களுடைய) பாசங்களை காலிடை கழற்றி,Kaalidai Kalittri - காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும், இரா பகல்,Iraa Pakal - இரவும் பகலும் ஓதுவித்து,Othuviththu - நல்லறிவைப் போதித்து பயிற்றி,Payittri - (கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும் பணி செய்ய,Pani Seiyya - நித்திய கைங்கர்யம் பண்ணும்படி என்னை கொண்டான்,Ennai Kondaan - அடியேனைக் கைக் கொண்டருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |