Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 446 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
446ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4
மங்கிய,Mangiya - (ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை,Val Vinai - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்,Noigal - வியாதிகளே
உமக்கும்,Umakkum - உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை,Or Val Vinai - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்,Kandir - (இன்று) பாருஙக்ள்
இங்கு,Ingku - இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்,Pugenmin Pugen Min - வர வேண்டா, வர வேண்டா
எளிது அன்று ,Elidhu Andru - (இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) சுலபமான கரியமன்று;
புகேன்மின்,Pugenmin - ஆகையால் இனி இங்கு வர வேண்டா
சிங்கப் பிரானவன்,Singap Piraanavan - நரசிம்மாவதாரமெடுத்து உபசரித்தருளினவன
எம்மான் அவன்,Emmaaan Avan - (என் ஆத்துமா) எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்,Saerum - எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்,Thiru Kovil Kandir - திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத,Pangkap Padaadha - பரிபவப் படாமல்
உய்யபோமின்,Uyya Pomin - பிழைத்துப் போங்கள்.
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.