| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 447 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5 | மாணி,Maani - பிரமசாரி வேஷத்தை யுடைய குறள் உரு,Kural Uru - வாமனாய் அவதரித்தவனும் மாணிக்கப் பண்டாரம்,Maanikkap Pandaaram - மாணிக்க நிதி போல் இனியவனும் மாயனை,Maayanai - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை பேணி,Paeni - ஆசைப் பட்டு கொணர்ந்து,Konarndhu - எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து என் மனத்துள்ளே,En Manaththullae - என் நெஞ்சினுள்ளே புகுத,Pugudha - புகுந்திருக்கும்படி பிறிது இன்றி,Piridhu Inri - வேற்றுமை யில்லாமல் வைத்துக் கொண்டேன்,Vaiththuk Konden - அமைத்துக் கொண்டேன். வலி வல் குறும்பர்கள் உள்ளீர்,Vali Val Kurumpargal Ullir - மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே! நடமின்,Nadamin - (வேறிடந்தேடி) ஓடுங்கள்; பாணிக்க வேண்டா,Paanikka Vaendaa - தாமதிக்க வேண்டியதில்லை, பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |