| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 448 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6 | உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர் அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6 | உற்ற,Utrra - நெடு நாளாக இருக்கிற உறு பிணி,Uru Pini - மிக்க வருத்தத்தைச் செய்கிற நோய்காள்,Noigal - நோய்களே! உமக்கு,Umakku - உங்களுக்கு ஒன்று,Onru - ஒரு வார்த்தை சொல்லுகேன்,Sollugenaen - சொல்லுகிறேன்: கேண்மின்,Kaenmin - கேளுங்கள்; பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்,Pettrangal Maeykkum Piraanaar Paenum - (நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான திருக் கோயில்,Thiruk Koyil - திருக் கோயிலாயிற்று; கண்டீர்,Kandir - முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்; ஆழ்,Aazh - (ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின வினை காள்,Vinai Kaal - ஓ கொடுமைகளே! இன்னம்,Innam - மறுபடியும் அற்றம் உரைக்கின்றேன்,Attram Uraikkindren - அறுதியாகச் சொல்லுகிறேன்; உமக்கு,Umakku - உங்களுக்கு இங்கு,Ingku - இவ்விடத்தில் ஓர் பற்று இல்லை,Or Patru Illai - ஒருவகை அவலம்பமும் கிடையாது; நடமின்,Nadamin - (இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |