| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 45 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2 | உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2 | உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும் இடை,Idai - நடு நடுவே விரவி,Viravi - கலந்து கோத்த,Kotha - கோக்கப் பட்ட எழில்,Ezhil - அழகிய தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும் ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும் விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய் காபாலி,Kaabaali - கபால தாரியாய் ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-; உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள் தாலேலோ,Thaalelo - தாலேலோ உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ |