Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 450 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
450ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8
ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8
பீதக ஆடை பிரானர்,Peethaga Aadai Piraanargal - திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து,Brahmaguru Aagivandhu - ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்,Podhu Il - அறிவுக்கு இருப்பிடானதும்
அல்,Al - அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்,Nenjcham Kamalam - ஹ்ருதய கமலத்தினுள்
புகுந்து,Pugundhu - பிரவேசித்து
என் னுள்ளே,En Nullae - எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்,Eaathangal Aayina Ellaam - தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து,Iranga Viduviththu - நீக்கி
என்,En - என்னுடைய
சென்னித் திடரில்,Sennith Thidarul - தலையினிது
பாத விலச்சினை,Paadha Vilachchinai - ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்,Vaiththaar - ஏறி யருளப் பண்ணினான்
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.