Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 451 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
451ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9
உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே
அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9
ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே,Aazhiye - திருவாழி யாழ்வானே!
எறி,Eri - (எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!,Naandhaka Vaaley - நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே,Azhagiya Saargngamae - அழகு பொருந்திய சார்ங்கமேசார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே,Thandae - (கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த,Irundha - (எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்,Enmar Uloga Paaleerkaal - அஷ்ட திக்குப் பாலகர்களே!
இறவு படாமல்,Iravu Padaamal - தப்பிப் போகாமல்
சங்கே,Sangey - ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற,Ara - (ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்,Urakal Urakal Urakal - உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்;
பறவை அரையா,Paravai Araiya - பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே!
உறகல்,Urakal - உறங்காதிரு;
பள்ளி அறை,Palli Arai - (நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) (எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை
குறிக் கொள்மின்,Kurik Kolmin - நோக்கிக் காத்திடுங்கள்.