| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 452 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10 | அரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும் அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும் வந்து,Vandhu - எழுந்து அருளி அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில் புகுந்து,Pugundhu - பிரவேசித்து, பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய பல திசை,Pala Thisai - பல அலைகள் மோத,Moedha - தளும்ப பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார். |