| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 453 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1 | மக்கள் அறுவரை,Makkal Aruvarai - உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்) கல் இடை மோத,Kal Idai Moedha - (கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்) இழந்தவள் தன்,Izhandhaval Than - (அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய வயிற்றில்,Vayitrril - திரு வயிற்றில் சிக்கென வந்து,Sikkena Vandhu - சடக்கென வந்து பிறந்து நின்றாய்,Pirandhu Nindraai - திருவவதரித் தருளினவனே! திருமாலிருஞ்சோலை எந்தாய்,Thirumaalirunjcholai Endhaai - (எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே! புக்கினில் புக்கு,Pukkinil Pukku - (நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து கண்டுகொண்டு,Kandukondu - உன்னை ஸேவித்து துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த,Thukkam Suzhalaiyai Soozhndhu Kidandha - துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற வலையை,Valaiyai - வலை போன்ற சரீரத்தில் நசையை அற,Ara - அறும்படி பறித்தேன்,Pariththaen - போக்கிக் கொண்ட அடியேன் இனி,Ini - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும் போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ? |