| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 454 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2 | நாடும்,Naadum - நாட்டிலுள்ளாரும் நகரமும்,Nagaramum - நகரத்திலுள்ளாரும் எங்கும்,Engkum - மற்றெங்குமுள்ளவர்களும் அளித்து,Aliththu - நெருங்கி தம்முடைய,Thammudaiya - தங்கள் தங்களுடைய தீ வினை,Thee Vinai - துஷ்ட கர்மங்களை தீர்க்கல் உற்று,Theerkal Utrru - ஒழிப்பத்தில் விருப்புற்று தெளித்து,Thelizththu - ஆரவாரித்துக் கொண்டு வலம் செய்யும்,Valam Seiyyum - பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற தீர்த்தம் உடை,Theertham Udai - தீர்த்தம் விசேஷங்களையுடைய திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் எந்தாய்,Endhaai - (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே! வளைத்து வைத்தேன்,Valaitthu Vaiththaen - (உன்னைச்) சூழ்ந்து கொண்டேன் இனி,Eni - இனி மேல் போகல் ஒட்டேன்,Pogal Ottaen - (நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன். உன் தன்,Un Than - உனக்கு உள்ள இந்திர ஞாலங்களால்,Endhira Gnaalangalal - மாயச் செய்கையினால்- வல்லமையினால் ஒளித்திடில்,Oliththidil - (உன்னை நீ) ஒளித்துக் கொண்டால் நின் திரு ஆணை,Nin Thiru Aanai - உனது பிராட்டியின் மேலாணை. நீ,Nee - (அப்படி ஒளிக்கலாகாது) நீ ஒருவர்க்கும்,Oruvarkkum - ஒருவரிடத்திலும் மெய்யன் அல்லை,Meiyan Allai - உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை. |