திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 455 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
455பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3
உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று இனக் குறவர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-3
பதவுரை Show / Hide
இனம் குறவர்,Enam Kuravar - திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்,Punam - புனத்திலுண்டான
தினை,Thinai - தினைகளை
கிள்ளி,Killli - பறித்து
புது அவி காட்டி,Pudhu Avi Kaatti - (அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
உன் பொன் அடி வாழ்க என்று,Un Pon Adi Vaazhga Endru - அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று (மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது,Pudhiyadhu - புதியதாகிய அத் தினையை
உண்ணும்,Unnum - உண்ணுதற்கு இடமான
எழில்,Ezhil - அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை,Maalirunjcholai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்,Endhaai - எம்பெருமானே!
உனக்கு,Unakku - (சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்,Pani Seidhu Irukkum Thavam Udaiyaen - கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி,Eni - இனி மேல்
போய்,Poi - புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து,Oruvan Thanakku Panindhu - ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை,Kadainthalai - (அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை,Nirkai - (கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்,Nin Saayai Azhivu Kandaai - உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?