| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 456 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன் பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4 | குரு,Guru - குருவம்சத்திற் பிறந்த பாண்டவர்க்காய்,Paandavarkkaai - பாண்டவர்களுக்காக ஓர் பொய் சுற்றம் பேசி சென்று,Or Poi Sutrram Paesi Sendru - ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு அங்கு,Angu - துரியோதனாதியரிடத்து தூது சென்றாய்,Thoodhu Sendraai - தூது போய் பேதம் செய்து,Paedham Seidhu - இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி இல்லை,Ellai - (பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்) கண்டதில்லை உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய எங்கும்,Enggum - துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல் பிணம் படுத்தாய்,Pinam Paduththaai - பிணமாக்கி யொழித் தருளினவனே! திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! காதம் பலவும்,Kaadham Palavum - பலகாத தூரமளவும் திரிந்து உழன்றேற்கு,Thirindhu Uzhandraerku - திரிந்து அலைந்த எனக்கு அங்கு,Angu - அவ் விடங்களில் ஓர் நிழல் இல்லை,Or Nizhal Illai - (ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை; நீர்,Neer - (அன்றியும்) (காபமாற்றக் கடவதான) தண்ணீரும் மற்று ஓர்,Matru Or - மற்றொரு இல்லை,Ellai - கண்டதில்லை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய உயிர்ப்புஇடம்,Uyirppidam - ஆச்வாஸ ஹேதுவான இடத்தை நான் எங்கும் காண்கின்றிலேன்,Naan Enggum Kaankindrilaen - நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை. |