| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 457 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன் சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5 | சேல்,Sael - மீன்களானவை உகளா நிற்கும்,Ughalaa Nirkum - துள்ளி விளையாடுதற்கு இடமான நீள் சுனை சூழ்,Neel Sunai Soozh - பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற என,Ena - என்னுடைய காலும்,Kaalum - கால்களும் எழா,Ezhaa - (வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை; கண்ண நீரும்,Kanna Neerum - கண்ணீரும் நில்லா,Nillaa - உள்ளே தங்குகின்றனவில்லை. உடல்,Udal - சரீரமானது சோர்ந்து நடுங்கி,Soarndhu Nadungi - கட்டுக் குலைந்து நடுங்கியதனால் குரலும்,Kuralum - குரலும் மேல் எழா,Mael Ezhaa - கிளம்புகின்றதில்லை; மயிர் கூச்சும் அறா,Mayir Koochchum Araa - மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை; திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எந்தாய்,Endhaai - எம்பெருமானே! தோள்களும்,Tholgalum - (எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்) தோள்களும் வீழ்வு ஒழியா,Veezhvu Ozhiaa - விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன); என் மனம்,En Manam - எனது நெஞ்சானது மால் உகளா நிற்கும்,Maal Ughalaa Nirkum - வியாமோஹத்தை அடைந்திரா நின்றது; வாழ,Vaazha - (இப்படிகளால்) வாழ்வுறும்படி உன்னை,Unnai - உன்னை தலைப் பெய்திட்டேன்,Thalaip Peiththittaen - சேர்ந்து விட்டேன். |