Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 458 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
458ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6
எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6
திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
எருது கொடி உடையானும்,Erudhu Kodi Udaiyaanum - வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்,Brahmanum - (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்,Indhiranum - தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்,Matrum Oruththarum - மற்றுள்ள எந்தத் தேவரும்
இ பிறவி என்னும் நோய்க்கு,E Piravi Ennum Noaikku - இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை,Marundhu Arivaar Illai - மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற,Maruththuvan Aay Nindra - (இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
மா மணிவண்ணா,Maa ManiVanna - நீலமணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர,Maru Piravi Thavira - (எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி
திருத்தி,Thirutthi - (அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்,Un Koyil Kadai Puga Pey - உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்.