திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 459 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
459பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7
அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால் இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய் சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7
பதவுரை Show / Hide
சக்கரமும்,Chakkaramum - திருவாழியாழ்வானும்
தட கைகளும்,Thada Kaigalum - பெரிய திருக்கைகளும்
கண்களும்,Kangalum - திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்,Peethaga Aadai Yodum - திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்,Chekkar Niraththu Sivappu Udaiyaai - செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்,Akkarai Ennum - ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்,Anarththa Kadalul - அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி,Azhundhi - (நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து,Elaiththirundhu - (அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
உன் பேர் அருளால்,Un Per Arulaal - (பின்பு) உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை,Ek Karai Eaerinaenaai - இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்,Anjael Endru Kai Kaviyai - அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள