| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 46 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3 | என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3 | எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய் எழில்,Ezhil - அழகிய திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய் சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன் எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய கிண்கிணி,Kinkin - கிண் கிணியை தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ |