| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 461 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | அங்கு,Angu - சோணித புரத்திற்கு சென்று,Sendru - எழுந்தருளி வாணனை,Vaananai - பாணாஸுரனுடைய ஆயிரம் தோளும்,Aayiram Tholum - ஆயிரந் தோள்களும் திசை திசை,Thisai Thisai - திக்குகள் தோறும் தென்றி வீழ,Thenri Veezha - சிதறி விழும்படி திருச் சக்கரம் அதனால்,Thiruch Chakkaram Athanaal - சக்ராயுதத்தினால் செற்றாய்,Settraai - நெருக்கி யருளினவனே! திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! வயிற்றில் கிடந்திருந்து அன்றே,Vayitrril Kidandhirundhu Anrae - கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே அடிமை செய்யல்,Adimai Seiyal - (உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில் உற்றிருப்பன்,Uttriruppan - அபிநிவேசங் கொண்டிருந்த நான் இன்று,Endru - இப்போது இங்கு வந்து,Engu Vandhu - இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து உன்னை,Unnai - (அனைவருக்கும் எளியனான) உன்னை கண்டு கொண்டேன்,Kandu Kondaen - ஸேவித்துக் கொண்டேன்; இனி போக விடுவது உண்டே,Eni Poga Viduvathu Undae - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ? |