| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 462 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10 | உலகம்,Ulagam - உலகத்தாரெல்லாரும் சென்று,Sendru - (தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய் குடைந்து,Kudainthu - அவகாஹித்து ஆடும்,Aadum - நீராடா நிற்கப் பெற்ற சுனை,Sunai - தீர்த்தங்களை யுடைய திருமாலிருஞ்சோலை தன்னுள்,Thirumaalirunjcholai Thannul - திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற பிரான்,Nindra Praan - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய அடி மேல்,Adi Mael - திருவடிகள் மேல் அடிமைத்திறம்,Adimaiththiram - கைங்கரிய விஷயமாக பொன் திகழ்,Pon Thigal - ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற மாடம்,Maadam - மாடங்களினால் பொலிந்து தோன்றும்,Polindhu Thoondrum - நிறைந்து விளங்கா நின்ற புதுவை,Puduvai - ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு கோன்,Koon - தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் நேர்பட,Naerpadha - பொருந்தும்படி விண்ணப்பம் செய்,Vinnappam Sei - அருளிச் செய்த ஒன்றினோடு ஒன்பதும்,Onrinodu Onbadum - இப் பத்துப் பாசுரங்களையும் பாட வல்லார்,Paada Vallaar - பாட வல்லவர்கள் உலகம் அளந்தான் தமர்,Ulagam Alandhaan Thamar - திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர் |