| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 472 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10 | தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 | தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில் மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள் தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே! வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும் மதிள், Madhil - மதில்களை யுடைய துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற) இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம் இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு என் பால், En paal - என்னிடத்தில் இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |