திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 48 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 5 | எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5 | பதவுரை Show / Hideஎழில் ஆர்,Ezhil aar - அழகுமிக்கிருந்துள்ள திருமார்பிற்கு,Thirumaarpirku - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு இவை ஏற்கும் என்று,Ivai erkum endru - இவை பொருந்தும் என்று அழகிய,Azhagiya - அழகியவையான ஐம்படையும்,Aimbadayum - பஞ்சாயுதங்களையும் ஆரமும்,Aaramum - முத்து வடத்தையும் கொண்டு,Kondu - எடுத்துக்கொண்டு, வழுஇல்,Valuil - குற்றமற்ற கொடையான்,Kodaiyaan - ஔதார்யத்தையுடையனான வயிச்சிரவணன்,Vaichiravanan - குபேரானானவன் தொழுது,Thozhuthu - (இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு உவனாய் நின்றான், தாலேலோ!,Uvanaai ninraan, Thaalelo! - உவனாய் நின்றான், தாலேலோ! தூ மணி,Thoo mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனே,Vannane - வடிவையுடைய கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |