| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 50 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 7 | கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள், கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7 | தேன் ஆர்,ThenAar - தேன் நிறைந்துள்ள மலர்மேல்,Malarmel - (செந்தாமரை) மலரிலுறைகின்ற திருமங்கை,Thirumangai - பெரிய பிராட்டியார் கான் ஆர்,Kaan aar - காட்டிலுண்டான நறு துழாய்,Naru thuzhaai - பரிமளம் மிக்க துளசியாலே கை செய்த,Kai seidha - தொடுத்த கண்ணியும்,Kanniyum - மாலையையும் வான் ஆர்,Vaan aar - சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள செழு,Sezhu - செழுமை தங்கிய சோலை,Solai - சோலையாய்த் தழைத்த கற்பகத்தின்,Karpagaththin - கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த வாசிகையும்,Vaasikaiyum - திரு நெற்றி மாலையையும் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள் கோனே,Kone - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல் தாலேலோ!,Azael azael Thaalelo! - அழேல் அழேல் தாலேலோ! குடந்தை,Kudanthai - திருக்குடந்தையிலே கிடந்தானே,Kidandhaane - கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |