| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 51 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 8 | கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8 | கச்சொடு,Kachodu - கச்சுப் பட்டையையும் பொன்,Pon - பொன்னாற்செய்த சுரிகை,Surikai - உடை வாளையும் காம்பு,Kaambu - கரை கட்டிய சேலையையும் கனம்,Kanam - கநக மயமான வளை,Valai - தோள் வளைகளையும் மணி,Mani - ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய் உச்சி,Ucchi - உச்சியிலே சாத்தத் தக்கதான சுட்டி,Sutti - சுட்டியையும் ஒண் தாள்,On thaal - அழகிய காம்புகளை யுடைத்தாய் நிரை,Nirai - ஒழுங்கான பொற்பூ,Porpu - பொற்பூவையும் அச்சுதனுக்கு என்று,Achuthanukku endru - ‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று அவனியாள்,Avaniyaal - பூமிப்பிராட்டியானவள் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்; நஞ்சு,Nanju - விஷமேற்றின முலை,Mulai - பூதனையின் முலையின் பாலை உண்டாய்,Undaai - உண்ட கண்ணனே! தாலேலோ;,Thaalelo - தாலேலோ; நாராயணா! அழேல்! தாலேலோ,Narayana! Azael! Thaalelo - நாராயணா! அழேல்! தாலேலோ |