| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 52 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 9 | மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9 | மெய்,Mey - திருமேனியிலே திமிரும்,Thimirum - பூசுகைக்குரிய நானம் பொடியோடு,Naanam podiyodu - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும் மஞ்சளும்,Manjalum - மஞ்சள்பொடியையும் செய்ய,Seyya - சிவந்ததாய் தட,Thada - விசாலமாயுள்ள கண்ணுக்கு,Kannukku - கண்களில் (சாத்த) அஞ்சனமும்,Anjanamum - மையையும், சிந்தூரமும்,Sindooramum - ஸிந்தூரத்தையும் (திரு நெற்றியில் சாத்துகைக்கு) வெய்ய கலை பாகி,Veyya kalai paagi - கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள் கொண்டு,Kondu - எடுத்துக்கொடு வந்து உவளாய் நின்றாள்,Uvalaai ninraal - அதோ இரா நின்றாள்; ஐயா,Ayaa - ஸ்வாமியான கண்ணனே! அழேழ் அழேழ் தாலேலோ;,Azael azael Thaalelo - அழேழ் அழேழ் தாலேலோ; அரங்கத்து,Arangaththu - ஸ்ரீரங்கத்திலே அணையானே,Anaiyaane - (திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே! தாலேலோ.,Thaalelo - தாலேலோ. |