திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 54 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 1 | தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1 | பதவுரை Show / Hideஇள,Ila - இளமை தங்கிய மா மதீ,Maa madhi - அழகிய சந்திரனே! தன் முகத்து,Than mugaththu - தன் முகத்தில் (விளங்குகிற) சுட்டி,Sutti - சுட்டியானது தூங்க தூங்க,Thoonga thoonga - பல காலும் தாழ்ந்து அசையவும் பொன் முகம்,Pon mugam - அழகிய முகத்தை யுடைய கிண் கிணி,Kin kini - சதங்கைகளானவை ஆர்ப்ப,Aarppa - கிண் கிண் என்றொலிக்கவும் தவழ்ந்து போய்,Thavazhnthu poy - (முற்றத்தில்) தவழ்ந்து போய் புழுதி,Puzhuthi - தெருப்புழுதி மண்ணை அளைகின்றான்,Alaikindraan - அளையா நிற்பவனும் என் மகன்,En magan - எனக்குப் பிள்ளையுமான கோவிந்தன்,Govindhan - கண்ண பிரானுடைய கூத்தினை,Kooththinai - சேஷ்டைகளை நின் முகம்,Nin mugam - உன் முகத்தில் கண் உள ஆகில்,Kan ulla aagil - கண் உண்டேயானால் நீ இங்கே நோக்கி போ,Nee ingae nokki po - நீ இங்கே பார்த்துப் போ. |