திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 56 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
56பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3
பதவுரை Show / Hide
அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி,Oli - ஒளி பொருந்திய
வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று
எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய
முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே
வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான்
உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற
கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில்
நோவாமே,Novaame - நோவு மிகாத படி
கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா.