திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 58 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
58பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 5
அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல் புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5
பதவுரை Show / Hide
புகர்,Pugar - தேஜஸ்வியாய்
மா,Maa - பெருமை பொருந்தியிரா நின்ற
மதீ,Madhi - சந்திரனே!
அழகிய வாயில்,Azhagiya vaayil - அழகிய திருப் பவளத்திலே
ஊறல்,Uural - ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்,Amudham - அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா,Thelivuraa - உருத் தெரியாததாய்
மழலை முற்றாத,Mazhalai mutraadha - மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்,Ilanj sollaal - இளம்பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;,Unnai koovugindran - உன்னை கூவுகின்றான்;
குழகன்,Kuzhagan - எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்,Sreedharan - ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ,Koova koova - (இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்,Nee podhiyel - நீ போவாயேயானால்
நின் செவி,Nin sevi - உன் காதுளானவை
புழை இல,Puzhai ila - துளை யில்லாதவையாக
ஆகாதே,Aagaadhe - ஆகாதோ?(ஆகவே ஆகும்)