திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 59 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
59பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில் விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6
பதவுரை Show / Hide
விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே
மன்னிய,Manniya - பொருந்திய
மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள
தட,Thada - விசாலமான
கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது
அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா