திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 60 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
60பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7
பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7
பதவுரை Show / Hide
மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே
ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே
வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்,Ivan - இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை,Maalai - இம் மஹா புருஷனை
மதியாதே,Madhiyadhae - அவமதியாமல்
மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா