திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 61 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
61பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 8
சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8
பதவுரை Show / Hide
நிறை மதி,Nirai madhi - பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை,En ila singaththai - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை
சிறியன் என்று,Siriyan endru - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்,Izhalael - அவமதியாதே;
சிறுமையில்,Sirumaiyil - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை,Vaarthaiyai - செய்கையை
மாவலி இடை சென்று கேள்,Maavali idai sendru kel - மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
சிறுமை பிழை கொள்ளில்,Sirumai pizhai kollil - (இப்படி யுள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில்
நீயும்,Neeyum - (அப்போது) நீயும்;
உன் தேவைக்கு,Un thevaikku - (அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை,Uriyai - தகுந்தவனாவாய் ; (அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்,Nedu maal - ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்,Virainthu unnai koovuginraan - (‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )