திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 62 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
62பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 9
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண் வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9
பதவுரை Show / Hide
மா மதீ!;,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
தாழியில்,Thaazhil - தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
தட,Thad - பெரிதான
கைஆர,Kaiaara - கை நிறைய (அள்ளி)
விழுங்கிய,Vizhungiya - அமுது செய்த
பேழை வயிறு,Paezhai vayiru - பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்,Empiraan - என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;,Unnai koovuginraan - (இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு,Aazhi kondu - திருவாழியாலே
உன்னை எறியும்,Unnai eriyum - உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை,Aiyuravu illai - ஸம்சயமேயில்லை;
வாழ உறுதியேல்,Vaazha urudiyael - (இதில் நின்றுந்தப்பி) வாழக்கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odivaa - மகிழ்ந்து ஓடிவா