Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 64 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
64ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 1
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1
உய்ய,Uyya - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு,Ulagu - லோகங்களை
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து
உண்ட,Unda - (பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை) உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா,Mani vayiraa - அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு,Pala oozhi oozhi thoru - பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்,Aalin ilai athan mel - ஆலிலையின் மேல்
பைய,Paiya - மெள்ள
உயோகு துயில் கொண்ட,Uyogu thuyil konda - யோகநித்திரை செய்தருளின
பரம் பரனே,Param parane - பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்,Pangayam - தாமரை மலர் போன்று
நீள்,Neel - நீண்டிருக்கின்ற
நயனம்,Nayanam - திருக் கண்களையும்
அஞ்சனம்,Anjanam - மை போன்ற
மேனியனே ஐய,Meniyaane aiya - திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்,Seyyaval - செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான
நின் அகலம்,Nin akalam - உன் திரு மார்வானது
சேமம் என கருதி,Semam ena karuthi - (இந்நிர்த்தனத்தால் அசையாமல்) ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி,Selvu poli - ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்,Makaram - திரு மகரக் குழைகளோடு கூடின
காது,Kaadhu - திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக,Thigazhnthu ilaga - மிகவும் விளங்கும்படி
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!