Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 65 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
65ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 2
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-2
கோன்,Kon - வலிமையை யுடைய
அரியின்,Ariyin - (நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு,Uruvam kondu - வேஷங்கொண்டு
அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய
உடலம்,Udalam - சரீரத்தில்
குருதி,Kuruthi - ரத்தமானது
குழம்பி எழ,Kuzhambi ezha - குழம்பிக் கிளரும்படியாகவும்
அவன்,Avan - அவ்வஸுரனானவன்
மீள,Meela - மறுபடியும்
மகனை,Maganai - தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி,Meimmai kola karuthi - ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்,Koor ugiraal - கூர்மையான நகங்களாலே
குடைவாய்,Kudaivai - (அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை,Melai - மேன்மை பொருந்திய
அமரர் பதி,Amarar pathi - தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா,Mikku vekundu vaa - மிகவும் கோபித்துவா (அதனால்)
காளம்,Kaalam - கறுத்த
நில்,Nil - சிறந்த
மேகம் அவை,Megam avai - மேகங்களானவை
கல்லொடு,Kallodu - கல்லோடு கூடின
கார் பொழிய,Kaar poliya - வர்ஷத்தைச் சொரிய
கருதி,Karuthi - (‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை,Varai - (அந்த) கோவர்த்தநகிரியை
குடையா,Kudaiyaa - குடையாகக்கொண்டு
காலிகள்,Kaaligal - பசுக்களை
காப்பவனே,Kaappavane - ரக்ஷித்தருளினவனே!
ஆன,Aana - (இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!