திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 650 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
650பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 4
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும் கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே
பதவுரை Show / Hide
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை, Mavinai Vaai Pilandhu Ugantha Maalai - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை, Velai Vannana - கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை, En Kannana - என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று, Anru - (இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி, Van Kuntram Aendhi - வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட, Aavinai Uyyaik Konda - பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை, Aayar Aetrai - இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை, Amarar Tham Thalaivana - நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை, Am Tamil Inba Paavinai - அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை, A Vadamozhiyai - அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து, Patru Atrarhal Payil Arangathu - ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
கோவினை, Kovinai - ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற, Na Ur - நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி, Vazhuthi - துதித்து
என் தன் கைகள், En Than Kaigal - என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய், Koyi Malar Thuy - (காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல், Kooppum Naal Endru Kol - அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!