Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 652 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
652பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 6
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே
அளி மலர் மேல் அயன், Ali Malar Mel Ayan - (மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன், Aran - சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும், Indiranodu Eanai Amarar Galum - இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும், Arampaiyarum - ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும், Mattrum - மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும், Theli Mathi Ser Munivargal Tham Galum - தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி, Undhi - ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில், Thisai Thisaiyil - பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி, Malar Thuvi - புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும், Sendru Serum - வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து, Kalimalar Ser Pozhil Arangathu - தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி, Uragam Eri - திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும், Kan Valarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர், Kadal Vannarar - கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும், Kamalam Kannum - செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும், Oli Mathi Ser Thiru Mugamum - ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம், En Ullam - என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல், Miga Urugum Naal Endru Kol - மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?