திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 653 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
653பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 7
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?
பதவுரை Show / Hide
மறம் நிகழும் மனம் ஒழித்து, Maram Nigazhum Manam Ozhithu - கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி, Val Pulankal Adakki - கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து, Idar Paaram Thunbam Thurandu - (மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
இரு முப்பொழுது ஏத்தி, Iru Muppozhudhu Aethi - பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற, Ellai Illaa Thol Nerik Kan Nilai Nindra - அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன, Thondar Aana - தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம், Aram Thigazhum Manaththavar Tham - தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை, Kathiyai - பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து, Ponni Ani Arangathu - காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
நிறம் திகழும், Niram Thigazhum - அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை, Maayoni - ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள், En Kangal - எனது கண்களானவை
கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல், Neer Malku Nirkum Naal Endru Kol - ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?
மறம், Maram - கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து, Idarp Paarath Thunbam Thurandu - “பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.