| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 656 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 10 | வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ? | வன், Van - (நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும பெரு, Peru - பெருமை தங்கியதுமான வானகம், Vaanagam - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் அமரர், Amarar - தேவர்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் மண் உய்ய, Man Uyya - பூலோகம் உஜ்ஜீவிக்கவும் மண் உலகில் மனிசர் உய்ய, Man Ulagil Manisar Uyya - பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும் மிகு துன்பம் துயர் அகல, Migu Thunbam Thuyar Akala - மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும் அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர, Ayirvu Ondru Illa Sugam Valara - துக்கம் கலசாத சுகம் வளரவும் அகம் மகிழும், Aham Makizhum - (எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ, Vazha - உஜ்ஜீவிக்கவும் அன்போடு, Anbodu - திருவுள்ளத்தில் உகப்போடு தென் திசை நோக்கி, Then Thisai Nookki - தெற்குத் திக்குக்கு அபிமுகமாக பள்ளி கொள்ளும், Palli Kollum - பள்ளி கொண்டிரா நின்ற அணி அரங்கன், Ani Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய திரு முற்றத்து, Thiru Muttirathu - ஸந்நிதியுள் திரு முற்றத்திலே அடியார் தங்கள், Adiyar Thangal - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய இன்பம் மிகு பெரு குழுவு கண்டு, Inbam Migu Peru Kuzhuvu Kandu - ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து யானும், Yaanum - அடியேனும் இசைந்து, Isainthu - (அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி உடனே, Uthane - அவர்களோடு கூட இருக்கும் நாள் என்று கொல், Irukkum Naal Endru Kol - வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?). |