| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 657 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 11 | திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால் குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே | திடர் விளங்கு கரை, Thidar Vilangu Karai - மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான பொன்னி நடுவு பாடு, Ponni Nadivu Paadu - காவிரியின் நடுவிடத்து கடல் விளங்கு, Kadal Vilangu - கடல் போல் விளங்குகின்ற கரு மேனி, Karum Meeni - கரிய திருமேனியை யுடைய அம்மான் தன்னை, Amman Thannai - பெரிய பெருமாளை கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால், Kan Aara Kandu Ugakkum Kaadhal Thannal - கண்கள் த்ருப்தி யடையும்படி குடை விளங்கு, Kudai Vilangu - (அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும் விறல் தானை, Viral Thaanai - பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும் கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும் கூடலர் கோன், Koodalar Kon - மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும் கொடை, Kodai - ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான குலசேகரன், Kulashekaran - குலசேகரப் பெருமாள் சொற்செய்த, Sorzseitha - அருளிச் செய்த நடை விளங்கு, Nadai Vilangu - தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற தமிழ் மாலை பத்தும், Tamizh Maalai Paththum - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்; வல்லார், Vallaar - ஓத வல்லார்கள் நலம் திகழ் நாரணன், Nalam Thigazh Naaranan - கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய அடி கீழ் நண்ணுவார், Adi Keezh Nannuvaaar - திருவடிகளில் சேரப் பெறுவர். |