திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 659 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
659பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 2
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?
பதவுரை Show / Hide
தோடு உலாம் மலர் மங்கை, Thodu Ulam Malar Mangai - இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும், Thol Inai Thoyndhadum - திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால், Sudar Valiyal - புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும், Needu Maa Maram Settradhum - நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும், Nirai Meyththadhum - இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி, Aadi - சரீர விகாரம் பெற்று
பாடி, Paadi - (காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று, O Arang Endru - ‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும், Azaikkum - கூப்பிடுகிற
தொண்டர், Thondar - கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி, Adi Podi - திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில், Naam Aada Peril - நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர், Gangai Neer - கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை, Kudaindhu Aadum Vetkai - அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது, En Aavathu - ஏதுக்கு?