| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 66 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 3 | நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் தம்மனையானவனே. தரணிதலமுழுதும் தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1-5-3 | ம்முடை,Mmudai - எங்களுக்கு நாயகனே,Naayakane - நாதனானவனே! நால் மறையின்,Naal maraiyin - நாலு வேதங்களுடைய பொருளே,Porule - பொருளாயிருப்பவனே! நாபியுள்,Naabiyul - திருநாபியில் முளைத்திராநின்ற நல் கமலம்,Nal kamalam - நல்ல தாமரைமலரிற் பிறந்த நான்முகனுக்கு,Naanmukhanukku - பிரமனுக்கு ஒருகால்,Orukaal - அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில் தம்மனை ஆனவனே,Thammanai aanavane - தாய் போலே பரிந்து அருளினவனே! தரணி தலம் முழுதும்,Tharani thalam muzuthum - பூமி யடங்கலும் தாரகையின் உலகும்,Thaarakaiyin ulakum - நக்ஷத்ர லோக மடங்கலும் தடவி,Thadavi - திருவடிகளால் ஸ்பர்சித்து அதன் புறமும்,Athan puramum - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும் விம்ம,Vimm - பூர்ணமாம்படி வளர்ந்தவனே,Valarnthavane - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே! வேழமும்,Vezhamum - குவலயாபீடமென்ற யானையும் ஏழ் விடையும்,Ezh vidaiyum - ஏழு ரிஷபங்களும் விரவிய,Viraviya - (உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த வேலைதனுள்,Velaithanul - ஸமயத்திலே வென்று,Vendru - (அவற்றை) ஜயித்து வருமவனே,Varumavane - வந்தவனே! அம்ம,Amma - ஸ்வாமியானவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |