திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 662 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
662பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 5
பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன் செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம் மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே
பதவுரை Show / Hide
பொய், Poi - க்ருத்ரிமமாய்
சிலை குரல், Silai Kural - கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு, Aeru - (ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து, Eruththam Iruththu - முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன், Poar Aravu Eerththa Kon - போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய், Silai Sei - கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி, Sudar Oli - மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம், Thinnam - த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா, Maa - பெரிதான
மதிள் சூழ், Madhil Soozh - மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம், Then Arangan Aam - தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று, Mei Silai Karu Megam Ondru - சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய், Than Nenjul Nindru Thigazhapp Poi - தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே, Mei Silirppavar Thammaiye - மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து, En Manam Ninainthu - என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும், Mei Silirkkum - மயிர்க் கூச்செறியப் பெற்றது.
“திகழப்போய்” என்ற விடத்து, போய், Thigazhappoy Endra Vidathu Poi - வார்த்தைப்பாடு.
“மனம் மெய் சிலிர்க்கும்” என்றது, Manam Mei Silirkkum Endrathu - மனம் விகாரப்படா நின்ற தென்றபடி.