திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 666 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
666பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 9
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
பதவுரை Show / Hide
கண் பனி, Kan Pani - ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர, Moytthu Soora - இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப, Meigal Silirppa - உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று, Aengi Ilaitthu Nindru - நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து, Eyththu - நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு, Kumbidu Nattam Ittu - மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி, Ezhunthu Aadi Paadi Irainji - நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன், En Aththan - எனக்குத் தந்தையாய்
அச்சன், Achchan - ஸ்வாமியான
அரங்கனுக்கு, Aranganukku - ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி, Adiyargal Aagi - அடியவர்களாய்
அவனுக்கே, Avanukke - அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர், Piththar Aamavar - பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள், Piththar Allargal - பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும், Mattrayaar Muttum - (பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே, Piththare - பைத்தியக்காரர்கள் தான்.