திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 667 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
667பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 10
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
பதவுரை Show / Hide
அல்லி மாமலர் மங்கை நாதன், Alli Maamalai Mangai Naathan - அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய
மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான பக்தர்களுடைய
என்றும் மேவு மனத்தன் ஆம், Endrum Mevu Manaththan Aam - எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும்
கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசரும்
கூடல் நாயகன், Koodal Naayagan - மதுரைக்கு அரசரும்
கோழி கோன், Kozhi Kon - உறையூருக்கு அரசருமான
குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வருடைய
சொல்லின், Sollin - ஸ்ரீஸூக்திளாலே அமைந்த
இன் தமிழ் மாலை வல்லவர், In Tamil Maalai Vallar - இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள்
தொண்டர் தொண்டர்கள் ஆவர், Thondar Thondargal Aavar - தாஸாநுதாஸராகப் பெறுவர்