திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 668 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 1 | மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே | பதவுரை Show / Hideமெய்யில் வாழ்க்கையை, Meiyil Vaalkkaiyai - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே மெய் என கொள்ளும், Mei En Kollum - பாரமார்த்திகமாகக் கருதுகின்ற இவ் வையம் தன்னோடும், Iv Vaiyam Thannodum - இவ்வுலகத்தாரோடு யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - (இனி) நான் சேர்வதில்லை ஐயனே, Aiyane - ‘ஸ்வாமீ’ அரங்கா, Arangaa - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்; என் தன் மாலுக்கே, En Than Maalukke - என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே மையல் கொண்டொழிந்தேன், Maiyal Kondonzhindhen - வ்யாமோஹடைந்திட்டேன். |