திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 67 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 4 | வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-4 | பதவுரை Show / Hideவானவர் தாம்,Vaanavar thaam - தேவர்கள் மகிழ,Magizha - மகிழும்படியாகவும் வல் சகடம்,Val sakadam - வலியுள்ள சகடாஸுரன் உருள,Urula - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும் வஞ்சம்,Vancham - வஞ்சனையை உடையளான பேயின்,Peyin - பூதனையினுடைய முலை,Mulai - முலை மேல் தடவிக் கிடந்த நஞ்சு,Nanj - விஷத்தை அமுது உண்டவனே,Amudhu undavane - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே! கானகம்,Kaanagam - காட்டிலுள்ளதான வல்,Val - வலிமை பொருந்திய விளவின்,Vilavin - விளாமரத்தினுடைய காய்,Kaai - காய்களானவை உதிர,Udhira - உதிரும்படி கருதி,Karuthi - திருவுள்ளத்திற் கொண்டு கன்று அது கொண்டு,Kanru adhu kondu - கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு எறியும்,Eriyum - (விளவின் மேல்) எறிந்தவனாய் கரு நிறம்,Karu niram - கறுத்த நிறத்தை யுடையனாய் என் கன்றே,En kanrae - என்னுடைய கன்றானவனே! தேனுகனும்,Thenukanum - தேனுகாஸுரனும் முரனும்,Muranum - முராஸுரனும் திண் திறல்,Thin thiral - திண்ணிய வலிவை யுடையனாய் வெம்,Vem - கொடுமை யுடையனான நரகன்,Naragan - நரகாஸுரனும் என்பவர் தாம்,Enbavar thaam - என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும் மடிய,Madiya - மாளும்படியாக செரு,Seru - யுத்தத்திலே அதிர,Athira - மிடுக்கை உடையயனாய்க் கொண்டு செல்லும்,Sellum - எழுந்தருளுமவனான ஆனை,Aanai - ஆனை போன்ற கண்ணனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |