| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 672 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 5 | தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய் நீதி யாரொடும் கூடுவதில்லை யான் ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே | தீது இல் நல் நெறி நிற்க, Theethu Il Nal Nerai Nirka - குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே (அவ்வழியில் போகாமல்) அல்லாது செய் நீதியாரொடும், Alladhu Sei Neethiyaarodum - நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு ஆதி, Aadhi - (உலகங்கட்கு) முதல்வனாய் ஆயன், Aayan - ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய் அம் தாமரை பேதை மா மணவாளன், Am Thamarai Pethai Maa Manavaalan - அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான அரங்கன் தன், Arangan Than - ஸ்ரீரங்கநாதன் திறத்தில் பித்தன், Piththan - மோஹங் கொண்டிரா நின்றேன். தீமையோடு கலசிய நல்ல நெறி, Theemaiyodu Kalasiya Nalla Nerai - என்று கண்டுகொள்க. |