திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 673 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 6 | எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே | பதவுரை Show / Hideஎம் பரத்தர் அல்லா ரொடும், Em Parathar Allaa Rodum - என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு; கூடலன், Koodalan - (நான்) கூட மாட்டேன்; உம்பர் வாழ்வை, Umbar Vaazvai - தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும் ஒன்று ஆக, Ondru Aaga - ஒரு புருஷார்த்தமாக கருதலன், Karuthalan - எண்ண மாட்டேன்; அமரர்க்கு, Amararukku - நித்ய ஸூரிகளுக்கு தம்பிரான், Thampran - ஸ்வாமியாய் அரங்கம் நகர், Arangam Nagar - கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற எம் பிரானுக்கு, Em Piranukku - பெரிய பெருமாள் விஷயத்தில் த்ழுமையும், Thumaiyum - எப்போதும் பித்தன், Piththan - பித்தனாகா நின்றேன். |