திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 674 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 7 | எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே | பதவுரை Show / Hideசெம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான எம்பெருமான் எத் திறத்திலும், Eth Thiraththilum - எந்த விஷயத்திலும் யாரொடும், Yarodum - கண்ட பேர்களோடே கூடும் அச் சித்தம் தன்னை, Koodum Ach Chiththam Thannai - சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை தவிர்த்தனன், Thavirthanan - நீக்கி யருளினான்; (ஆதலால்) அத்தனே, Aththane - ஸ்வாமியே! அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே! என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று கூவா நின்றேன்; எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன், Em Piranukke Piththanai Ozhindhen - . |