திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 676 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
676பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 9
அங்கை ஆழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
பதவுரை Show / Hide
அம் கை ஆழி, Am Kai Aazhi - அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை, Adi Inai - திருவடிகளில்
தங்கு சிந்தை, Thangu Sindhai - பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம், Thani Peru Piththan Aam - லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன், Kongar Kon - சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சொல், Sol - இப் பாசுரங்களை
இங்கு, Ingu - இவ் விபூதியிலே
வல்லவர்க்கு, Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை, Edham Ondru Illai - (பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.