திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 678 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
678பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 2
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே
பதவுரை Show / Hide
ஆனாத செல்வத்து, Anadha Selvaththu - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள், Arambaiyargal - அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ, Than Soozh - தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும, Vaan Aalum Selvamum - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும், Man Arasum - இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - (வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை, Then Aar Poo Solai - தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம், Thiruveangadam - திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில், Sunaiyil - சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும், Meen Aayi Pirakkum - ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி, Vithi - வாக்கியத்தை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
அரம்பையர்கள், Arambaiyargal - ரம்பை முதலியோர்.
தேன் ஆர், Then Aar - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம்.
சுனை, Sunai - மலையில் நீரூற்றுள்ள குணம்.