திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 679 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 3 | பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே | பதவுரை Show / Hideபின்னிட்ட சடையானும், Pinnitta Sadayanum - திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும் பிரமனும், Brahmanum - சதுர்முகனும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் துன்னிட்டு, Thunnittu - நெருக்கி புகல் அரிய, Pugal Ariya - உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற வைகுந்தம் நீள் வாசல், Vaikundham Neel Vaasal - பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே மின் வட்டம் சுடர் ஆழி, Min Vattam Sudar Aazhi - மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய வேங்கடம் கோன் தான், Vengadam Kon Thaan - திருவேங்கடமுடையான் உமிழும், Umizhum - வாய்நீருமிழ்கின்ற பொன் வட்டில், Pon Vattil - தங்க வட்டிலை பிடித்து, Pidiththu - கையிலேந்திக் கொண்டு உடனே புக பெறுவேன் ஆவேனே, Udaney Puga Peruven Aaveney - அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன். பின்னிட்ட, Pinnitta - பின்னிய; இடு – துணைவினை. வட்டில், Vattil - இங்கே, படிக்கம். உடனே, Uthane - சீக்கிரமாக எனினுமாம். |